Kavitai | Kathaikal | Vimarsanam | CookingTips | Proverbs | Movie Links | TamilCalender
Joke

Your Ad Here
Star
நினைவுகள்

சிலையைப் பார்ப்பது போல்
ஒருவருக்கொருவர் நாம்
முதன் முதலாய் பார்த்த
அவசர நொடிகள்!

ஒற்றை முதற்பரிசை
பகிர்ந்து கொண்டதும்
இணைந்துவிட்ட நம்
மன அலைகள்!

காதலிக்கிறெனென்று நீயோ நானோ
சொல்லத் தேவையென்னயென்று
சொல்லிச் சிரித்த
கதவோர முதல் முத்தம்!

மெய்ஞானம் முதல் முத்தத்திலென்று
நம்மில் உதயமான ஞானம்!
சிலநேர ஸ்பரிசங்கள் பொங்கியெழ
அதை கட்டுப்படுத்த
நாம் தவித்த தவிப்புகள்!

வெட்கத்தால் வேகமாய் நீ செல்ல
என் நினைவுகளின் இல்லத்திற்கு
ஒடிவந்து கொஞ்சுமுந்தன்
கொலுசு சங்கீத்த்தை
ரசிக்கும் மலரும் நினைவுகள்!

தொட்டியில் மீன்

ரசிக்கத்தான் வருகிறார்கள்
எல்லோரும்!
விடுவிக்கும் மனம் யாருக்குமில்லை!

நான் நீரில் நீந்துகிறேன்
நீங்கள் அறியாமையில் நீந்துகிறீர்கள்....

காதல்

மனதுக்குள் கலவரம்.....
விழிகளின் ஆயுதங்கள்
மாறி,மாறி தாக்க

இதழ்களின் முத்தமோ
கலவரத்தை அடக்கியது!

இப்போது, என் வாலிப நேசத்தில்
அமைதியாய் பறக்கிறது
காதல் கொடி!

அழகான கவிதை

கடற்கரை மணலில்
உனது பெயரை எழுதி வைத்தேன்...

அலைவந்து எடுத்துச் சென்றது
அழகான கவிதை என்று!!!

லஞ்சம்

லட்சியங்களை
லட்சியம்
செய்யாமல்

லஞ்சம் கொடுத்து
வாங்கிய பதவி
மனைவி.

அவள் வருவாளா

மனைவியை மறந்து மனசு
மற்றவளை நினைக்க

மனைவி மருந்தருந்த
மாமனார் தலைகுனிய

மகனே என்ற தாயோ
மானங்கெட்டவனே
என்கிறாள்- அண்ணா
என்றவனோ அனாதை
என்கிறான் - தம்பி
என்றவனோ தள்ளி
வைக்கிறான்

இத்தனையையும் தாங்கிக்
கொண்டு தவிக்கிறேன்
தனிமரமாக- இங்கு
தண்ணீர் ஊற்ற
அவள் வருவாளா.

பொறுமை

தலை நிமிர்த்திப் பார்க்கவில்லை
நெல் மகள்!

அறுவடை என்ற பெயரில்
அரிவாள் கொண்டு
வெட்டிய போதும்....!

காதல் கோட்டை

செங்கலானது உன் சிரிப்பு

சிமெண்டானது உன் வார்த்தை

இரும்பானது உன் அழகு

தூணானது உன் அறிவு

ஜன்னலாகி கதவாகி
கோட்டை ஆன போது

புல்டோசரானது
உன் குடும்பம்

மண்ணோடு மண்ணாகியது
நம் காதல் கோட்டை.

பக்கத்தில் வா...

கண்ணடித்தேன்,
கை பிடிப்பதற்காக!

புன்னகைத்தேன்,
நாணம் காண்பதற்காக!

முத்தமிட்டு
பறக்கவிட்டேன்-அவள்
அச்சம் காண்பதற்காக!

இத்தனையையும்
பயந்து பயந்து
செய்த என்னிடம்,
பயப்படாமல்
ஜாடை காட்டினாய்,
பக்கத்தில் வா என்று!

பெண்ணே காதல்
வந்தாலே
தானாக தைரியமும்
வந்து விடுமோ!

தவிப்பான வாழ்க்கை

கருவறையில் இருந்தால்
வெளிவர தவிப்பு!

வெளி வந்தால்
கனவோடு தவிப்பு!

தேர்வு வந்தால்
வெற்றியடைய தவிப்பு!

வெற்றியடைந்தால் -
வேலைக்கு தவிப்பு!

வேலை கிடைத்தால்
வாழ்வோடு தவிப்பு!

வாழ்க்கை முடிந்தால்
மரணத்தில் தவிப்பு!

தண்டனை

ஒரு நாள்
உன் அழகை
ரசித்த குற்றத்திற்காக

ஆயுள்கால தண்டனை
தந்து விட்டது
திருமணம்!

ஏதேதோ...நினைவு!

எங்கெங்கோ.....
பிறந்தோம்!

எங்கெங்கோ
வளர்ந்தோம்!

ஆயினும் நாம்
ஒன்றாக பயணித்த
சில நினைவுகள்.....!

தினம் தினம்
வந்து போகின்ற
பேருந்து வரலாம்
வராமல் போகலாம்
வழித்தடமும் மாறலாம்
ஆனால்

நான் மட்டுமே.....
வந்து வந்து போன
சில நினைவுகள்.....!
மனம் விட்டு
பேசிய சில வார்த்தைகள்
வாய்விட்டு சிரித்த
சில நேரங்கள்

உதட்டளவு உறவினை
உதறித் தள்ளிவிட்டு
உள்ள்த்தளவில்
உறவினை வளர்த்து
உயிர் வாழ்வோமெனச் சொன்ன
உன் நினைவுகளால்.....!

மறக்க முடியாத
உறவுகளைச் சுமந்து
ஊனமாய் போன உடம்புடன்
நான் மட்டும்
நித்திரை இல்லாத
நினைவுகளோடு.....
இன்னும்

more kavitai...
Star Photo
Joke

Tell a Friend:

Copyright © 2006 CineChips.com All Rights Reserved.
Site Meter