Home | Kavitai | Kathaikal | Vimarsanam | CookingTips | Proverbs | Movie Links | TamilCalender
Joke
Actress

காதல்!

நான்
என்னுள்
மறைத்து
வைத்த
காதலை
அவளே
சொன்னாள்...

என்னிடம்
அல்ல,
என்
நண்பனிடம்!


மாற்றம்

இயற்பியலாய் வந்து
வேதியியலாய் நுழைந்து
உயிரியலாய் என்னுள்
கலந்தவளே

என்னை விட
உயரியவனாய் ஒருவன் வந்தவுடன்
கணக்கியலாய் என்னை
கழற்றிவிட்ட
உன் உளவியல்
என்னடி பெண்ணே!

கண்ணே...

காற்றால் கலைந்து விடாத
மேகமாகி
உனக்காக காத்திருப்பேன்!

நீரால் கரைந்து விடாத
மலையாகி,
உனக்காக காத்திருப்பேன்!

காலத்தால் அழிந்துவிடாத
காவியமாகி,
உனக்காக காத்திருப்பேன்!

மரணத்தால் மறைந்துவிடாத
மா மனிதனாகி,
அடுத்த ஜென்மத்திலும்...
உனக்காகவே காத்திருப்பேன்!

நீ வருவாய் என...

மொட்டாய் காத்திருக்கிறேன் உன்
மூச்சுக்காற்று பட்டு மலர...

விடியாமல் காத்திருக்கிறேன் உன்
முகம் பார்த்து விடிய...

பாதையாய் காத்திருக்கிறேன் உன்
பாதம் பட்டு துலங்க...

மணமாய் காத்திருக்கிறேன்
என்னை நீ நுகர...!

வேண்டுகிறேன்

குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!

மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க வேண்டுகிறேன்!

கூந்தல் வாசம் நுகர்ந்தபடி
உன்னோடு பொழுதை கழிக்க
தென்றல் வீச வேண்டுகிறேன்!

கடலில் கால் நனைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க வேண்டுகிறேன்!

கவிதை சொல்லியபடி
உன்னோடு காலார நடக்க
பாதை நீள வேண்டுகிறேன்!

காதலித்தபடி
உன்னோடு ஆயுள் முழுதும் வாழ
நீ என் மனைவியாக
வேண்டுகிறேன்...

கருவறையில்...

உன்னை
என் கருவறையில்
உயிர் தரிக்கிறேன்
என் காதலனாக!

என் கணவனாக
நீ உயிர் பெறுவாய் என்று...!

உன் பிரிவும், செல்லக் கோபமும்,
குழந்தை பிறக்கும் தறுவாயில்
தாய் அனுபவிக்கும் வலியான
சுகங்கள் போல...

எனக்கும் அது
சுகமாகத்தான் இருக்கிறதடா!

நீ கருவிலே சிதைந்து விடாதே...
நான் கதறி அழுதுவிடுவேன்!

உறுத்தல்

முள்ளாய் இருந்தேன்
மலராய் ஆக்கினாய்!

தீயாய் இருந்தேன்
தீபமாய் ஆக்கினாய்

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஆக்கினாய்.

விலங்காய் இருந்தேன்
மனிதனாய்
ஆக்கினாய்.

ஆனால்...
நீ மட்டும் மாறாமல்
இன்னும் கல்லாய்
இருப்பது ஏன்?

முரண்பாடு

புத்தரை
வணங்கியபடி
பக்தன்
கேட்டான்,

புத்தர்
துறந்த
அனைத்தையும்...!

காதல் பிரிவு

மலையை விட்டு
பிரியும் அருவி!

கடலை விட்டு
பிரியும் கரை!

வானத்தை விட்டு
பிரியும் மழை!

உடலை விட்டு
பிரியும் உயிர்!

உன்னை விட்டு
பிரியும் நான்!

என்னை விட்டு
பிரியும் நீ!

நம் இருவரையும்
விட்டு பிரிகிறது
நம் உண்மையான காதல்!

more kavitai...
Actress
Joke

Tell a Friend:

Copyright © 2009 CineChips.com All Rights Reserved.