Kavitai | Kathaikal | Vimarsanam | CookingTips | Proverbs | Movie Links | TamilCalender
Joke

Star
vegetable kuruma

தேவை:

உருளைக்கிழங்கு - 200 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
பச்சைபட்டாணி - 200 கிராம்
தயிர் - 200 மில்லி
கிரீம் - 200 மில்லி
முந்திரிபருப்பு - 100 கிராம்
மல்லிதூள் - 50 கிராம்
பட்டை - 50கிராம்
ஏலம் - 5கிராம்
தக்காளி - 50கிராம்
ப.மிளகாய் - 50கிராம்
கசகசா - 10கிராம்
லவங்கம் - 50 கிராம்
தேங்காய் - 1 எண்ணெய் - 200 மில்லி
இஞ்சி,பூண்டு - சிறிதளவு

செய்முறை:

காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

தேங்காய்,கச கசா , இஞ்சி, பூண்டு,முந்திரிபருப்பு இவற்றை தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம்,ஏலம் போட்டு தாளிக்கவும், அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

கூடவே காய்கறிகள், தக்காளி,ப.மிளகாய் என வரிசையாக போட்டு வதக்கவும்.

அதில் தயிர் கலந்து விட்டு மசாலாவை போடவும். மசாலா வாசனை போனதும் குருமா சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

ponda


தேவை:
உருளைக்கிழக்கு- 250கிராம்
பெரிய வெங்காயம்- 2
பச்ச மிளகாய்- 4
முந்திரி பருப்பு- 2
கடலை மாவு- 200கிராம்
கொத்தமல்லி இலை- சிறிதளவு
கருவேப்பிலை- சிறிதளவு
உப்பு -தேவைகேற்ப்ப
சோடா உப்பு- சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும்.

பிறகு வெங்காயம் மிளகாய் கொத்தமல்லி இலை கருவேப்பில்லை முந்திரி பருப்பு இவைகளை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள சாமான்களைப் போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.பிறகு உருளைகிழங்கையும் போட்டு கிளறி இறக்கி உருண்டைகளாக பிடித்து ஆற வைக்கவும்.

கடலைமாவில் சோடா உப்பு பெருங்காயம் உப்பு கலந்து இட்லி மாவு போல் கரைத்து கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய்க் காயவைத்து தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு சிவக்க எடுக்கவும்.

இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்.

noodles

தேவை:

நூடுல்ஸ் - 200 கிராம் பாக்கெட்.
முட்டைக்கோஸ் - 100 கிராம்.
பீன்ஸ் - 50கிராம்.
கேரட் - 25 கிராம்.
பீட்ரூட் - 25 கிராம்.
பச்சை மிளகாய் - 4 .
பெரிய வெங்காயம் - 2.
தக்காளி - 25 கிராம்.
இஞ்சி பூண்டு - சிறிதளவு.
கொத்தமல்லி கீரை- சிறிதளவு.
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்.
மிளகு தூள்- 1 டீஸ்பூன்.

செய்முறை:

நூடுல்ஸை சுடுதண்ணீரில் 2 நிமிடம் போட்டு வடிக்கட்டி எடுக்கவும்.
பிறகு 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஆற விடவும்.

காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணெலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், மிளகு தூள் போட்டு வதக்கவும்.

அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கிய காய்கறிகளை போட்டு நன்றாக வேக வைக்கவும். பிறகு நூடுல்ஸ் பாக்கெட்டில் இருக்கும் மசாலா பவுடரை இதனுடன் சேர்க்கவும்.

பிறகு ஆற வைத்த நூடுல்ஸையும் போட்டு நன்றாக கிளரவும். இப்பொழுது சுவையான நூடுல்ஸ் ரெடி.

சுட சுட பறிமாறவும்.

Inippu vatai

தேவை:

உளுந்து- 250கிராம்.
ஜீனி- 400கிராம்.

செய்முறை:
ஜீனியை பாகு போல் காய்ச்சி வைக்கவும்.
உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊரவைத்து கெட்டியாக அரைக்கவும்.
பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
. பிறகு பாகில் ஊரவைத்து எடுத்து சாப்பிடலாம்.

Pizza

தேவை:

மைதா- 250கிராம்.
ஜீனி- 2 டீஸ்பூன்
[1/4 டீஸ்பூன்ஈஸ்ட் உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்.]
வெண்ணய்- 1டீஸ்பூன்.
பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்.
உப்பு- 1 டீஸ்பூன்.
செய்முறை:

மைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணய்,உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

பிறகு சற்று விரிவான பாத்திரம்[8 அங்குல விட்டம்.2 அங்குல உயரம்]ஒன்றில் நெய் தடவி,பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ. மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும்.

வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
பிஸ்ஸாவினுள் பரப்புவதற்கு தேவை:

தக்காளி- 300கிராம்
குடை மிளகாய்- 1
மிளகாய் சாஸ்- 2 டீஸ்பூன்
பூண்டு- 4 பல்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
வெள்ளரிக்காய்- 1
பெரிய வெங்காயம்- 1
சீஸ்- 50கிராம்
இஞ்சி சிறிய துண்டு.
தேவையான அளவு உப்பு

செய்முறை;

வெங்காயம்,பூண்டு,இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம்,பூண்டு,இஞ்சி போட்டு வதக்கி,தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும்.
உப்பு, மிளகாய்தூள் போடவும்.
சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும்.

2 தக்காளி,வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி,சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பிஸ்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி,மிளகாய் சாஸ் ஊற்றி சீஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும்.

வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி
சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான பிஸ்ஸா ரெடி.

Paratta


தேவை:
மைதா மாவு- 500கிராம்.
வெண்ணெய்- 1மேஜைகரண்டி.
உப்பு- 1டீஸ்பூன்.
ரீபைண்ட் ஆயில்- 300மில்லி.

செய்முறை:

மாவை பத்திரத்தில் போட்டு வெண்ணெய் உப்பு இவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.

பின் தண்ணீர் விட்டுஒன்று சேரப் பிசைந்து கொள்ளவும்.

8 உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
உருண்டைகளின் மீது ரீபைண்ட் ஆயில் ஊற்றி 30 நிமிடம் ஊரவைக்கவும்.

பிறகு மாவு உருண்டைகளை,எண்ணெய் தடவிய பெரிய பலகையில்,பூரிக்கட்டையால் மெல்லியதாக விரிக்கவும்

ஒரு அடி நீளம் விரிக்கலாம்.

மெல்லிய துணி போல் வந்ததும் சுருக்கங்கள் செய்து சுருட்டி வைத்துவிடவும்.

பிறகு தோசை கல்லை சூடாக்கி அதில் சுருட்டி வைத்துள்ள புரோட்டாவை கையால் மெதுவாக விரித்து சூடான கல்லில் போட்டு மிதமான தீயில் சுடவும்.
இவ்வாறு சுட்டு எடுத்த புரோட்டாக்களை பிரிஜில் வைத்து தேவையான சமையம் பயன்படுத்தலாம்.

இந்த வறண்ட புரோட்டாக்களை நெய் ஊற்றி சுட்டாலும் நன்றாக இருக்கும்.

அல்லது பூரிப்போல் எண்ணெய்யில் விட்டு சுட்டு எடுக்கலாம்.

மொறு மொறுப்பாக சுவையாக இருக்கும்.

Naan

தேவை:

மைதா- 500கிராம்.
ஈஸ்ட்- கால் டீஸ்பூன்.
[ஈஸ்டை வெது வெதுப்பான ஜீனி சேர்த்த தண்ணீரில் 8 நிமிடம் கலந்து வைக்கவும்]
வெண்ணெய்- 1 டீஸ்பூன்.
உப்பு- 1டீஸ்பூன்.
செய்முறை:

மாவை பாத்திரத்தில் போட்டு

வெண்ணெய் உப்பு ஈஸ்ட் தண்ணீர் இவற்றைச் சேர்த்து ஒன்று சேர பிசையவும்.

பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.

பிறகு மாவை ஈரத் துணிபோட்டு மூடி தனியே 3- 4 மணி நேரம் அடுப்புசூடு அல்லது எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மேல் வைத்தால் மாவு நன்கு ரொட்டி மாதிரி எழும்பிவிடும்.

அந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி கனமான பலகையில் நீண்ட வட்டவடிவில் இட்டு, தோசைக்கல் அல்லது தந்தூரி அடுப்பில் போட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.

இப்பொழுது சுவையான நான் ரெடி.

மேலே செல்க
Star Photo
Joke

Tell a Friend:

Copyright © 2006 CineChips.com All Rights Reserved.
Site Meter